செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மனைவி கோவிலுக்கு போவதை முதலமைச்சர் தடை செஞ்சாலும்  கடவுளை  நம்புறவன் கேட்க வா போறான். இவங்க தடுத்து பார்த்திருப்பாங்க… துர்கா அம்மா அதை கேட்கல…. முதலமைச்சருக்கு வேற வழியில்லை சரண்டர் ஆயிட்டாங்க… சனாதன தர்மத்தை வேற இருக்க வேண்டும் என்று சொன்ன முதலமைச்சருடைய பையன்,

அவங்க குடும்பத்திலேயே இருக்கக்கூடிய….  அவங்க மனைவியார்,  தாயார் கோவில் கோவிலா போறதை  தடுத்து பார்த்தாங்க,  முடியல…  பல்டி அடிச்சுட்டாரு.திமுகவினுடைய ஐம்பெரும் முழக்கம் என்ன ?  எதற்காக கட்சி ஆரம்பிச்சாங்க…  திமுக கட்சி ஆரம்பிச்சு கடவுள் இல்லை….  இன்னைக்கு  கோவிலுக்கு போறாங்க…. நான் கேட்கிறேன்…. கோவிலுக்கு வெளியே பெரியார் அவர்களுடைய திரு உருவ சிலையை வச்சி  கடவுளை நம்புறவன் காட்டுமிராண்டின்னு போட்டு இருக்காங்க.

1967இல் ஆட்சிக்கு வந்தபோது ஆதிகாரபூர்வமாக அரசானை வெளியிட்டு கோயில் வாசல்ல அந்த சிலையை வச்சிருக்காங்க. அப்ப கோயில் வாசலில் யார் இருப்பா ? கடவுளை நம்பாதவன் கோவில் வாசல் இருப்பானா ? கடவுளை நம்புறவன்  கோவில் வாசலில் இருப்பானா ?  கடவுளை  நம்பறவுங்க கோயில் வாசலில் இருப்பாங்க.

திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை மறந்து விடக்கூடாது. கடவுளை நம்புகிறவன்  காட்டுமிராண்டி என்கின்ற வாசகத்தை கோயில் வாசல்ல போய் வச்ச கட்சி,  இன்னைக்கு 70 ஆண்டுகள் கழிச்சு அப்படியே பல்டி  அடிச்சு,  நான் கோவிலுக்கு போறவங்களை தடுக்க மாட்டேன் அப்படின்னு இருக்காங்க…  அப்போ திராவிட கொள்கை தோற்றுவிட்டது என்று அர்த்தம். அதை முதலமைச்சர் மேடையில் அப்படியே ஓபன்னாக  சொல்லி இருக்கலாம். எங்களுடைய கொள்கையும்,  சித்தாந்தமும்  தோற்றுவிட்டது.

70 ஆண்டு காலமாக மக்களை முட்டாளாக்க நினைத்தோம். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்லிட்டா முடிஞ்சது. அதனால அவர்கள் மனைவியும்,  உதயநிதி ஸ்டாலின் தாயாரையும் கண்ட்ரோல் பண்ண பார்த்திருப்பாங்க,  முடியலைன்னு நினைக்கிறேன்….  அதனால முதலமைச்சர் பல்டி அடிச்சு,  நாங்க இன்னைக்கு எதிரி இல்லை என   ஆரம்பிச்சுருக்காரு என தெரிவித்தார்.