
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்தது. சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது.
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதி முழுவதும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்பவர்கள் தொடர்ந்து உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதால் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெய்ரோ வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள காசியான்டெப் நகருக்கு வடக்கே மையம் கொண்டிருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் காசியான்டெப்பில் இருந்து 33 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாகக் கூறியது. இது நூர்தாகி நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் இருந்தது. இது 18 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு வலுவான 6.7 நடுக்கம் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது இப்பகுதியில் உள்ள பல மாகாணங்களில் உணரப்பட்டது மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சைப்ரஸ், டர்கியே, கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா, யுனைடெட் கிங்டம், ஈராக் மற்றும் ஜார்ஜியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
அண்டை மாகாணங்களான மலாத்யா, தியார்பாகிர் மற்றும் மாலத்யாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக ஹேபர்டர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வடக்கு நகரமான அலெப்போவிலும் மத்திய நகரமான ஹமாவிலும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சிரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு துருக்கியின் எல்லையில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக எதிர்க்கட்சியின் சிரிய சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. பெய்ரூட் மற்றும் டமாஸ்கஸ் நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் இறங்கினர். தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்ட காரணத்தால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுபவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.. ஆனால் பலர் அங்கு வரும்போது உயிரிழந்து விட்டார்கள் என மருத்துவர்கள் அறிவித்து வருகின்றனர்..
அந்த அளவுக்கு மிகவும் மோசமாக இந்த பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விடியற்காலை 4 : 15 மணியளவில் இந்த பூகம்ப தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அந்த கட்டிட இடுப்பாடுகளில் சிக்கிவிட்டார்கள். கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பாகவே அவர்களால் வெளியே வர முடியவில்லை.. தூக்கத்திலிருந்து எழுந்து வருவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்து விட்டன..
ஆகவே மிகவும் மோசமான நிலையில் துருக்கி தற்போது பாதிப்புகளை சமாளித்து வருகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. துருக்கி நாட்டிலேயே இது போன்ற மிக மோசமான ஒரு பேரழிவு ஏற்பட்டது இல்லை என அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.. உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் உதவி செய்தால் மட்டுமே மீட்பு பணியை தொடர முடியும் எனவும். மீட்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட முடியும் எனவும் கருதப்படுகிறது. இந்தியா மீட்பு குழுக்களை அனுப்ப தயாராக வைத்துள்ளதாக துருக்கி நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அது தவிர மருத்துவ குழுக்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.. மருந்துகளுடன் மருத்துவ குழுக்கள் இந்தியாவில் இருந்து சென்று அங்கே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றன..
அதேபோலவே மீட்பு குழுக்களை எப்போது அனுப்ப வேண்டும் என துருக்கி அரசுடன் தற்போது இந்திய அரசு தொடர்பில் உள்ளது. அவர்கள் என்ன திட்டப்படி இயங்குகிறார்களோ அதற்கு ஏற்ற வகையில் இந்தியாவில் இருந்து அங்கே மீட்பு குழுவினர் செல்ல தயாராக உள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது துருக்கி யில் எமர்ஜென்சி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு, தற்போது இந்த பூக்கம்பத்தால் பாதிக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகிய 2 பணிகள் நடந்து வருகின்றன..
அதன் பிறகு சிகிச்சையில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு, அவர்களுக்கு தங்குமிடம் இல்லாத சூழ்நிலையில் அவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அவசர அவசரமாக வேலைகள் நடந்து வருகிறது.
துருக்கி மட்டுமில்லாமல் அண்டை நாடான சிரியாவில் அதிகமான உயிரிழப்பு இருந்து வரும் சமயத்தில் அங்கே குளிரும் கடினமாக இருக்கிறது. எனவே இந்த குளிருக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Horrific news of tonight’s earthquake in #Turkey & northern #Syria — the damage looks extensive.
The epicenter region is home to millions of refugees and IDPs, many of whom live in tents & makeshift structures. This is the absolute nightmare scenario for them. And it’s winter. pic.twitter.com/oACzWYtWb2
— Charles Lister (@Charles_Lister) February 6, 2023
தற்போதுவரை சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது ஒட்டு மொத்தமாக துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300ஐ கடந்துள்ளது.