மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கியுள்ளனர், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று AP தெரிவித்துள்ளது.

இதனிடையே தெற்கு துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் 7.6 ரிக்டர் அளவில் மற்றொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் அந்நாட்டின் பேரிடர் நிறுவனத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. புதிய நிலநடுக்கம் டமாஸ்கஸ், லதாகியா மற்ற சிரிய மாகாணங்களை உலுக்கியது என்று சிரியாவின் சனா (SANA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேடுதல், மீட்பு குழுக்கள், மருத்துவ குழுக்கள் துருக்கி விரைகின்றன. இஸ்தான்புல் இந்திய துணை தூதரகம் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.