
தமிழகத்தில் தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கியுள்ளது. இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளது. அந்த தேர்தலில் திமுக சார்பில் ஒரு குழுவும், அதிமுக சார்பில் ஒரு குழுவும் போட்டியிடும் நிலையில் பா ஜனதா கட்சியின் தனி குழு தற்போது உருவாகியுள்ளது. அதோடு சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் புதிய கட்சியை ஆரம்பித்த விஜய் கட்சிக்கான கொடி மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார். அதை தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இவர் தேர்தலில் போட்டியிட்டால் இளம் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்றும், அதே நேரத்தில் விஜயின் ரசிகர்களான பெண்களும் இவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் மாற்றத்தை விரும்புபவர்கள் தமிழக வெற்றி கழகத்தைக்கு ஓட்டு போட்டால் நிச்சயம் வெற்றி பெறும் என்னும் நோக்கத்தில் அரசியல் தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் சேர்வதற்கு தானாகவே முன் வருகின்றனர்.
அதன்படி முக்கிய தலைவர்களான பழ. கருப்பையா, தமிழருவி மணியன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் விஜய் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளனர் என்று பேசப்படுகிறது. அதோடு முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் விஜய் கட்சியில் சேர்வதற்கு முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் தற்போது இருக்கும் கட்சியில் சரியான அங்கீகாரம் கிடைக்காததால் விஜய் கட்சிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு பிறகு அரசியல் தலைவர்கள் விஜயை நேரில் சந்தித்து கட்சியில் சேர்வதற்கான பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு தமிழக வெற்றி கழக கட்சியில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.