
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிட இருக்கிறது. சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்த விஜய் தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஆன வேல்முருகன் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய கட்சியின் பெயர்தான் TVK. எனவே விஜய் அவருடைய கட்சி பெயரை TVK என்று அழைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்றபடி விஜய் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன் என்று கூறினார். மேலும் ஏற்கனவே நடிகர் விஜயின் கட்சி கொடியில் யானை சின்னம் இருந்தது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் போலீசார் 23 கேள்விகள் கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். இப்படி விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது TVK என்ற பெயருக்கும் புதிதாக சிக்கல் வந்துள்ளது. இது தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.