என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு ஒரு பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டார்கள். நங்கள் ஆட்சிக்கு வந்தால்  ஒரே கையெழுத்தில் நீட்டை நீக்கி விடுவோம் என்று சொன்னார்கள். உடனே உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள்.

எப்படி ஒரு கையெழுத்தில் நிட்டை நீக்குவீர்கள் ஈன்று கேட்டல் ? அது  ரகசியம் சொல்லமாட்டேன், ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லுகிறேன் என்று சொன்னார். இன்னைக்கு எப்படி நீட்டை நீக்குவீர்கள் என்றால்,  முட்டை மந்திரவாதி போல, முட்டையை தூக்கிட்டு  வருகின்றார்.

இந்த முட்டைகுள்ள ரகசியம் இருக்கிறது… நாங்கள் நீட்டை நீக்கிடுவோம். அதனால் சகோதர சகோதரிகளே நீட் என்பது  தமிழ்நாட்டில் இன்றும் 100 வருடங்களுக்கு இருக்க தான் போகிறது. உங்களுடைய குழந்தைகள் நீட்டின் மூலமாக….

அரசு மருத்துவர்களாகி எனக்கு ஊசி போட தான் போகிறார்கள், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. திமுககாரன் தலைகீழாக நின்றாலும் இவர்களால் நீட்ல இருக்க கூடிய N-யையும் துக்க முடியாது. E-யையும் துக்க முடியாது. E -யையும் துக்க முடியாது. T -யையும் துக்க முடியாது என தெரிவித்தார்.