கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெங்கடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முடி வெட்டி விட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது சிறுவனின் பாட்டி முடியை ஒழுங்காக வெட்ட மாட்டியா? ஒழுங்காக முடி வெட்டவில்லை என்றால் வீட்டிற்கு வராத என கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறுவன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேடிய நிலையில் மரத்தின் அடியில் வாயில் நுரை தள்ளியபடி சிறுவன் மயங்கி கிடந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக சிறுவன் உயிர் இழந்தான். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.