தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சந்தீப் கிஷன். இவர் லோகேஷ் இயக்கத்தில் நடித்த மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தீப் கிஷன் மீண்டும் தமிழில் மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்தியம் பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் சிறுவனாக இருக்கும்போது ராகவேந்திரா மண்டபத்துக்கு அருகில் நடிகர் ரஜினியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தின் நடன இயக்குனர் என்னுடைய அண்ணன் என்பதால் என்னை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சென்றார். அப்போது ரஜினி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று அங்கிள் இனி சிகரெட் பிடிக்காதீங்க என்று கூறினேன். ஆனால் தற்போது நானே சிகரெட் பிடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.