
சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில், கணவன்-மனைவிக்கிடையேயான சிறிய உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மனைவி கைபேசியில் வீடியோ எடுக்கிறார்.
“பேபி, நான் எப்படி இருக்கிறேன்?” என கேட்க, அந்த நேரத்தில் கிச்சனில் மாவை பிசைந்துக்கொண்டிருக்கும் கணவர், பதில் சொல்லாமல் நேராக, மாவு பூசிய கையால் அவரது முகத்தில் வேகமாக அறைந்தார். அதில் மனைவியின் முகம் முழுக்க மாவு படிந்து காட்சியளிக்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து 3 கோடிக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதைப் பார்த்த பலரும் நகைச்சுவையுடன் கமெண்ட் எழுதி வருகின்றனர்.
“இந்த சம்பவத்துக்குப் பிறகும் அந்த ஆண் உயிரோட இருக்காரா?” என ஒருவர் எழுதியிருக்க, “மாவை சாயம் மாதிரி தேய்த்துட்டாரே, அண்ணா நம்ப பாஸ்” என மற்றொருவர் கலாய்த்துள்ளார். இது ஒரு நகைச்சுவை நோக்கத்தில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறப்படும் நிலையில், பலரும் இதைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.