பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பூ தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாணவனுக்கு மோடி அனுப்பிய பதில் கடிதத்தில், “என் தாயின் மறைவால் வந்த இழப்பை சமாளிக்க உங்களுடைய இரங்கல் கடிதம் வலிமையையும், தைரியத்தையும் கொடுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.