இந்தியாவில்  UPI பணபரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய வணிக மையங்கள் முதல் சிறுகடைகள் வரைUPI கியூ ஆர் கோடு அட்டைகள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று பிரதம மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  UPI குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது  BHIM -UPI ஆப்  மூலமாக சிறு வணிகர்கள் மேற்கொள்ளும் 2000 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 1500 கோடி ஊக்குத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக வணிகர்கள் நுகர்வோர்களுக்கு இடையே நிதி சுமை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்  ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக BHIM -UPI இல் 2000 வரை பண பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் ஊக்க தொகை அளிக்கப்படும். எல்லா வகையான பணப் பரிவர்தனைகளையும் மேற்கொள்வதற்கு பூஜ்ஜியம் மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.