அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். முன்னதாக அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது மீது இருமுறை கொலை முயற்சி நடைபெற்றது. அதன்படி ஒருமுறை பென்சிவேனியாவில் அவர் பிரச்சாரம் செய்யும் போது அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவதாக அவர் ஃபுளோரிடா கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் பயங்கர ஆயுதத்துடன் நெருங்கினார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கஜகஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்கா அதிபர் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த பிரச்சாரம் அநாகரிகமாக நடந்தது. டிரம்புக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இருக்கக் கூடாது. ஆனால் ட்ரம்பை எதிர்ப்பவர் அவரை கொலை செய்ய முயன்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது டிரம்ப் பாதுகாப்பாக இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது என்று கூறினார்.