
கடந்த சில வருடங்களுக்கு முன்பு 24ஆம் புலிகேசி எனும் திரைப்படத்தில் ஒப்பந்தமானார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அந்த படத்தின் படப்பிடிப்பில் இவர் சரியான ஒத்துழைப்பு தராத காரணத்தினால் தனக்கு பல கோடிகள் நஷ்டமாகிவிட்டது என தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் புகாரளித்தார்.
இதையடுத்து நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரெட் கார்டு தரப்பட்டு சில வருடங்கள் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் இருந்தார். அதன்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு இத்தடை விலகி மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு.
இந்த நிலையில் வடிவேலு போலவே பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் ரெட்கார்டு வழக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி லெக்பீஸ் எனும் திரைப் படத்தில் நடிப்பதாக கமிட்டாகி, 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளார்.

எனினும் வெறும் 4 நாட்கள் மட்டுமே ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், பின் நடிக்க வரவில்லை எனவும் அப்படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இதன் காரணமாக நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு ரெட்கார்டு வழங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.