
நீங்கள் லோனுக்கு தகுதியானவர்கள், ரூ. 3 லட்சம் லோன் தயாராக இருக்கிறது என திடீரென உங்களது போனுக்கு மெசேஜ் (அ) அழைப்புகள் வரும். நாம் கடனே கேட்காமல் ஏன் தாமாக முன் வந்து தருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். அதாவது, முன்பாக கடன் தொகையை முறைபடி திருப்பி செலுத்தியவர்களுக்கு மீண்டுமாக கடன் வழங்குவதற்கு வங்கிகள் எப்போதும் ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் வழக்கமாக பெறும் அதே கடன் திட்டங்களை போன்றே இங்கும் வட்டி மற்றும் ப்ராசஸிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இருப்பினும் இது ஒரு விளம்பரம் (அ) சலுகை திட்டம் என்பதால் வங்கிகள் உங்களுக்கு வட்டி மற்றும் ப்ராசஸிங் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் வழங்கக்கூடும். இக்கடன் சலுகையை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கான கால வரம்பும் உண்டு. எடுத்துக்காட்டாக வீட்டுக்கடன் எனில் 6 மாத கால அவகாசம் வழங்கப்படும். முன்னதாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதால் ப்ராசஸிங் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவை குறைவாக இருக்கலாம். ஆனால் வீடு (அ) கார் வாங்கவேண்டும் என்பது போன்ற தேவைகள் எதுவும் இன்றி சலுகை கிடைக்கிறது என்பதற்காக மட்டும் கடன் வாங்கவேண்டாம். உங்களுக்கு கடன் தேவை ஏற்பட்டால் உரிய வங்கிகளை தேர்ந்தெடுத்து நேரில் வட்டி விபரங்களை விசாரித்து பிறகுதான் லோன் வேலைகளை துவங்க வேண்டும்.