
கன்னடத்தில் இரண்டு முறை மாநில விருதுகளை பெற்ற டைரக்டர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “கொன்றால் பாவம்”. கடந்த 1981-களில் நடக்கும் கிரைம் த்ரில்லர் கதையான இத்திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படத்தை கோடை ரிலீசுக்க்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரை நடிகை சமந்தா தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டீசர் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Fresh & intriguing!! Looks like @varusarath5 is gonna KILL IT!
Here's the teaser of #KondraalPaavam: https://t.co/xgCFGMqJT7
Catch it on the big screen on Mar 10!@ActorSanthosh @EinfachStudios @dayalpadmanaban pic.twitter.com/PWafnvrd1c
— Samantha (@Samanthaprabhu2) February 23, 2023