
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த பெண்களால் 13 ஆண்டுகளாக நான் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கேன். பெண் வன்கொடுமை பேசும் போது….. ஆண் வன்கொடுமையும் பேசணும் இல்ல. நான், என் குடும்பம், நான் சார்ந்தவர்கள்,
நான் சார்ந்திருக்க கூடிய சொந்தங்கள், என்னை சார்ந்திருக்க கூடிய லட்சக்கணக்கான சொந்தங்கள். உலகம் முழுமைக்கும் எனக்கு உறவு இருக்கு.
எங்களை படுத்தின வன்கொடுமை…. யார் யாரை சொல்றதுன்னு இருக்கு ? இல்ல குற்றத்தின் உண்மை தன்மை… இன்னைக்கு விசாரிக்கும் போது…. அன்னைக்கே விசாரித்து இருக்கனும் இல்ல…. திரும்பப் பெற்ற வழக்கை திருப்பி ரிஓபன் பண்ணி, அதுக்கு உயிர் கொடுத்து… மறுபடியும் விசாரித்து…. அப்படி காவல்துறை கூட்டிட்டு போறாங்க…. ரகசியமாக கேட்குறாங்க…
மருத்துவமனை கூட்டிட்டு போறாங்க… சோதிக்கிறாங்க…. நீதிமன்றத்துக்கு முன்னாடி நிறுத்துறாங்க… இந்த பில்டப் எல்லாம் ரொம்ப ஓவர் பில்டப்பா இருக்குல்ல… பாட்சா பட பில்டப்பை விட ரொம்ப ஓவரா இருக்க. இதுல என்ன வன்கொடுமை இருக்கு ? 2 பெண் நின்னுட்டு இவ்வளவு தூரம் வன்கொடுமை செய்யுறது இருக்கா ?
சமூகத்துல இத்தனை கோடி மக்களால் நேசிக்கப்படக்கூடிய ஒருத்தனை… நிறுத்தி என்ன கேவலம் பேசி…. வாய்க்கு வந்ததெல்லாம் குற்றசாட்டு என சொன்னா…. அதையும் ரசிச்சி ரசிச்சி நீங்களும் செய்தியா போட… அதை காவல் துறையும் ரசிச்சி கேட்க… அப்போ இந்த சமூகத்தின் முன்பு நான் அவமானப்படுவது, அசிங்கப்படுவதை ரசிக்கிறீங்க. இது வன்கொடுமை இல்லை என தெரிவித்தார்.