
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசன்களை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இப்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. பலரும் கமல்ஹாசனுக்கு மிக சரியான மாற்றாக விஜய் சேதுபதி இருப்பார் என கூறுகின்றனர். கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட விசித்ரா கூறியதாவது, மூத்த நடிகர் கமல்ஹாசன் தோழமையுடன் பழகினாலும் அவர் செட்டிற்கு வந்தால் அனைவரும் பயப்படுவார்கள் என கூறியுள்ளார். சீனியர் நடிகரான கமல்ஹாசனுக்கு பல ட்ரோல்கள், மீம்ஸ்கள் வெளியானது. அதை இந்த சீசனில் எதிர்கொள்ள விஜய் சேதுபதி தயாராக இருக்க வேண்டும். அவர் தனது மெண்டல் ஹெல்த்தையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் வேண்டுமானால் தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆலோசனைப்படி விஜய் சேதுபதி செயல்படலாம் என விசித்திரா கூறியுள்ளார்.