தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுக கலைஞர்களின் படங்கள் என வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படங்களும் அழுத்தமான கதை களத்தை கொண்டுள்ளன. ஆகவே பாக்ஸ் ஆபீஸிலும் கலக்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் குறிப்பாக விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கோட் படம்  வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் ஓவர் சீஸ் போன்ற இடங்களில் படத்திற்கான பிரீ புக்கிங் நடந்து வருகின்றது. இந்நேரத்தில் படம் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சால்டன் பெப்பர் லுக் நடிகர் விஜய் அவர்களுக்கு அருமையாக வந்துள்ளதாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் டல் என்றாலும் இறுதியில் மாஸ் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதனைப் போல மோகன் அவர்களின் கலெக்ஷன் சிஎஸ்கே, கில்லி காட்சிகள் என அனைத்தும் அற்புதமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கடைசி 30 நிமிடம் வெறித்தனமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.