விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கடந்த சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த சீசனில் மட்டும் அதிகபட்சமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 130 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகும் விஜய் சேதுபதிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. படங்களில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி 30 முதல் 35 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். உலக நாயகனை விட விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் குறைவுதான்.