விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதில் அவர் ” அக்டோபர் 2ம் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன்.

மது ஒழிப்பதற்கும், போதை பொருட்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் அதன் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து தொடர் பரபரப்பில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவனிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. 15 நாள் பயணம் மேற்கொள்கிறார். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கு தொலை தொடர்பு வசதி தற்போது பெருகி உள்ளது. எனவே இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

ஐஏஎஸ் போன்ற அதிகாரிகள் அவர்களின் சிறந்த ஆளுமைகளை கொண்டு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். மதுவை வியாபாரம் செய்வது எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகள் சிந்தனையாற்றல் பயன்படுத்துகின்றனர் இது தனக்கு வேதனையாக இருக்கிறது எனவும் சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிறது.

ஆந்திராவிலும் கூட இதே போன்ற முயற்சியில் என்டிஆர்ஐ பின்பற்றி பலரும் வந்து பார்த்தார்கள். ஒருவராலும் முயற்சி செய்து அதில் வெற்றி பெற முடியவில்லை. தமிழ்நாட்டிலும் அப்படி பலர் முயற்சித்து அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்ஜிஆர் ஒரு காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அரசியலில் இருந்து போது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்களும் அவரோடு வெளியேறினர்.

அவருடைய வெற்றிக்கு வெறும் சினிமா ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் மட்டுமே காரணம் கிடையாது. இதை வைத்து அரசியல் செய்ய முடியாது. அவரோடு பல அரசியல் தலைவர்கள் கட்சி நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் இருந்தார்கள் அதனால் அவரால் வெற்றி பெற முடிந்தது. அதன்பின் சினிமா மூலம் வந்த தலைவர்கள் வெற்றி பெறாததற்கு காரணம் இது போன்ற மூத்த தலைவர்களின் உதவி இல்லாததால் தான்.

விஜய் அரசியல் கடினமான போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். முன்கூட்டியே நாம் ஒரு யுகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.