
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்துள்ள “தி கோட்” திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், மீனாட்சி, சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு யுவன் சங்கர் இசை அமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தியில் மட்டும் இந்த படம் வெளிவரவில்லை.
இந்தியில் ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்றால் 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடியில்
வெளியிடுவோம் என்ற கண்டிஷனை ஒத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக் கொள்ளாத எந்த ஒரு படத்தையும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட முடியாது. இதனால் அர்ச்சனா கல்பாத்தி மல்டிபிளக்ஸ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் தான் இந்தியில் இந்த படம் வெளிப்பட வெளியிடவில்லை. தென்னிந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்தி பதிப்பு அல்லாமல் இதர பதிப்புகளில் மட்டுமே படம் வெளியாகி இருக்கிறது. இந்தியில் வெளியாகாது காரணத்தினால் இந்த படத்திற்கான வசூல் பாதிப்பு இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.