வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தூண்டுதல் இல்லாம இது எப்படி ? 2011-இல் இந்த வழக்கு கொடுக்கப்படுது. கொடுக்கப்பட்டதே திமுக – காங்கிரஸின் தூண்டுதலின் பெயரில் தான்…  அன்னைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதுல உண்மை தன்மை என்ன என்று கேட்கிறார்கள் ?

இதையே வேலையா வச்சிக்கிட்டு வழக்கமா எல்லாரு மேலயும் இப்படி புகார் செய்யறாங்கன்னு தெரிஞ்ச உடனே… அதுல உண்மை தன்மை இல்லனு சொன்னஉடனே  தூக்கி தூர போட்டு போயிட்டாங்க. அதுக்கு பின்னாடி வந்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் நிறைய புகார் கொடுத்தாங்க. அவங்களுக்கு தெரியும். எடுக்கல…  இவங்களுக்கு என்னைய சமாளிக்க முடியல. என்ன பண்றது ? இத வச்சாவது எதாவது பண்ண முடியுமான்னு பாக்குறாங்க ?

128 வழக்கு என் மேல இருக்கு. அந்த வழக்குகளை எடுத்துட்டு வர முடியாது.நான் மக்களுக்காக போராடி போராடி சிறைக்கு போனது.   அதை தொட முடியல. அதனால இந்த வழக்கை எடுக்கும் போது என்னை  பெண்கள் மீது  சம்பந்தபடுத்தும்போது அசிங்கப்படுத்திடலாம். மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தலாம். மதிப்பை சிதைச்சிடலாம்; நற்பெயரை  சிதைசிடலாம்ன்னு செய்யப்பட்டது.

அது உங்களுக்கே தெரியுமே. இன்னைக்கு ஒரு மாசம் காலம் பேசக்கூடிய பேச்சா இது. நாட்டுல எந்த பிரச்சினையும் கிடையாதா ? இவுங்க கொடுத்த குற்றசாட்டு  புதுசு புதுசா இருக்கு. முதல்ல திருமணமானது என்று சொல்லவில்லை, முதல்ல 60 லட்சம் பணம் கொடுத்தேன், நகை கொடுத்தேன் என சொல்லல. ஒவ்வொன்னையும் புதுசு புதுசா சேர்த்து சொல்லும்போது… முன்னுக்கு பின்னு மாறி மாறி பேசுறீங்களே என காவல்துறையும் கேட்கல, ஊடகமும் கேட்கல. அப்போ வெறும் அவதூறு. ஒரு போராட்டக்காரரனை அவதூறு வச்சி மூடிறலாம்ன்னா… எப்படி சகிக்கிறது ? என தெரிவித்தார்.