
இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி (52) என்பவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்காகவும், தனது உடல் நிலையை சரி செய்து கொள்வதற்காகவும் முயற்சி செய்துள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே தான் இருக்கிறது. முதலில் அவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்றுவலி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது மூளையில் ரத்த கட்டிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அவருக்கு தேவையான சிகிச்சைகளை அழித்து வருவதாகவும், இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.