
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்குப் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதின் பின்னணியில், ஹரோகோபிந்தோ தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதில், தந்தை-மகன் இருவரும் பயத்தில் ஓடும் காட்சிகளும், அவர்களை தாக்கும் காட்சியும் நிமிடங்களும் பதிவாகியுள்ளன. அவர்களது வீட்டில் செங்கல், கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலைக்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜியாஉல் ஷேக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை 276 பேர் கைது செய்து, 100க்கும் மேற்பட்ட FIR-களை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், மாநில ஆளுநர் ஆனந்த போஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து, நியாயம் கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும், BSF வலைவழி பாதுகாப்பு சாவடிகளை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற குடும்பத்தினரின் கோரிக்கையை உரிய அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதாகவும் கூறியுள்ளார்.