ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது, பாதையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் ரயில்  பயணிகள் மீது நீர் தெளிப்பது  குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நபர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவில், பந்தலாக மூடிய பையை கட்டிய ஒருவர், ரயில்வே பாதையில் உள்ள நீர் குழாயை ரயிலுக்கு எதிராகத் திறந்து பயணிகளுக்கு நேராக தெளிக்கிறார்.  ரயிலின் கதவுகளில் நின்ற பயணிகள் மீது தண்ணீர் விழுகிறது.  இந்த சம்பவம் எங்கு? எப்போது நடந்தது? என்பது தெளிவாகத் தெரியவில்லை.மேலும் இந்த நபர் யார் என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த வீடியோவைப் பார்த்த பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதற்கு முன், 2024 டிசம்பர் மாதம் லக்னோவின் சர்பாக் ரயில் நிலையத்தில், அங்கு படுத்திருந்த பயணிகளுக்கு இரயில்வே ஊழியர்கள் குளிர்ந்த நீரைப் பீய்ச்சிய வீடியோ வைரலானது. அந்த சம்பவம் கடும் குளிர் வீசிய நேரத்தில் நடந்தது. பயணிகளை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என சமூக வலைதள பயனர்கள் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த மாதிரியான அதிகாரப்பூர்வமற்ற மற்றும் பயணிகளை பாதிக்கும் செயல்கள் தொடர்கின்றன, இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.