
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மர்ம நபர் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ரவுடியான பாலாஜி என்பவர் இருவரையும் தாக்கியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.