
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடித்த மதகதராஜா என்ற திரைப்படம் 12 வருடங்களுக்குப் பிறகு ஜனவரி 12ம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோஷனுக்காக விஷால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கை நடக்கத்துடன், பேச சிரமப்பட்டது பார்ப்பதற்கு உடல்நிலை சரியில்லாதது போல் இருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி சுசித்ரா விஷாலை, இந்த நிலைமையில் பார்க்க சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் விஷாலுக்காக பலரும் பரிதாபப்படுகின்றனர். ஆனால் கொஞ்சம் வருஷத்திற்கு முன்னாடி எனக்கு கார்த்திக் குமார் என்று ஒரு புருஷன் இருந்தார். அவர் ஒரு நாள் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷால் என்னுடைய வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். நான் சென்று பார்த்த போது கையில் ஒரு சரக்கு பாட்டலுடன் கார்த்தி இல்லையா என்று கேட்டார். நான் அவர் இல்லை என்று சொல்லிய பிறகு உடனே விஷால் அப்போ நான் வீட்டிற்குள் வரலாமா என்று கேட்டார்.
நான் முடியாது என்று சொன்னேன், அதற்கு இந்த சரக்கு பாட்டிலை கார்த்திக்கிடம் கொடுக்க வந்தேன் என்று கூறினார். நான் அவர் கௌதம் ஆபீஸ்-ல இருப்பார் அங்க போய் பாருங்க என்று சொல்லி விஷாலை திட்டினேன். அதற்கு அவர் என்ன என்று கேட்டபோது ஒன்னும் இல்லை எங்க வீட்டுக்கு வர பூனையை சொன்னேன் என்று பதில் அளித்தேன். இதுதான் உங்கள் விஷால், இந்த கேவலமான விஷாலுக்கு நீங்கள் இப்படி வருத்தப்படுகிறீர்கள் என்று அந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.