
ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இப்போது விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக 12 லட்சம் விவசாயிகள் மாநிலம் முழுவதும் பயனடைகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார்..