தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முதலீடுகளை ஈர் ப்பதற்காக அமெரிக்கா செல்கிறார். இதற்காக அவர் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் மாறுதல் ஒன்றே மாறாதது. Wait and see என்று கூறினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் டுவிஸ்ட் வைத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்‌. ஏற்கனவே சமீப காலமாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சர் அவையில் மாற்றம் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌