
சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரிதுள்ளது. குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில் 101-200 என்ற மிதமான வரம்பில், ஏற்ப்பட்ட இந்த ஏற்றம் காரணமாக மூச்சுத் திணறலை அனுபவிக்கக்கூடிய ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை கொண்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது இதய நோய் உள்ளவர்களையும் பாதிக்கலாம். எனவே மேற்கண்ட குறைபாடு உள்ளவர்கள் சுகாதார அதிகாரிகள் எச்சரித்து காற்று மாசுபாடு குறித்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதே போல், தங்கள் வீட்டின் அருகில் இதே போல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் பொதுநலன் கருதி மக்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.