
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு முன்னாள் குவெட்டா ஆணையாளரான இஃப்திகார் அகமது மற்றும் அவரது மகள் சைமா ஜோகேசாய் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று சரீன் ஏர் விமான மூலம் குவெட்டாவில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு சென்றனர்.
அப்போது விமான ஊழியர், அவர்களிடம் சீட் பெல்ட் அணியுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சைமா விமான ஊழியரை திட்ட ஆரம்பித்தார். இதன் காரணமாக விமானி, விமானத்தை நிறுத்தி விட்டு பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து தந்தை, மகள் ஆகிய இருவரையும் விமானத்திலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சைமா விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு, பெண் விமான ஊழியரை தாக்கினார். இதில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்ததோடு, பற்களும் உடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். ஆனால் பாலூசிஸ்தான் நிறுவனம் இந்த விவகாரத்தை சமரசம் செய்ய கூறியது.
இதையடுத்து முன்னாள் ஆணையாளர் மற்றும் அவரது மகள் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட விமான பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.