
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், பாஜக அலுவலகத்தில்… பாஜக கட்சியில் இருக்கின்ற பெண் நிர்வாகிகள் தொலைபேசிகள் ஓட்டு கேட்கபட்டது என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி வந்தது. அப்பொழுது இந்த குஷ்பூ எங்கு போனார்கள் ? அது மட்டுமல்லாமல்…. திருச்சி சூர்யா என்பவர் தன் கட்சியைச் சார்ந்த ஒரு பெண்ணை… எவ்வளவு கீழ் தரமாக பேச முடியுமோ பேசி, அந்த வீடியோவையும், ஆடியோவும் வெளியிட்டது எல்லா ஊடகத்திற்கும், மக்களுக்கும் தெரியும்.
அவரை திரு அண்ணாமலை அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறார். அப்பொழுது இந்த தேசிய மகளிர் ஆணையமும், குஷ்பும் எங்கு போயிருந்தார்கள் ? இவ்வளவு நாள் தேசிய மகளிர் ஆணையம் குஷ்பு எல்லாம் கோமா ஸ்டேஜில் இருந்தார்களா ? இப்பொதாவது தன்னுடைய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்ததற்கு வரவேற்கிறோம். அந்த பொறுப்பிற்கு ஏற்று செயல்படுவதை கண்டிப்பாக வரவேற்கிறோம்.
ஆனால் பட்டியல் இன சமூக மக்களை கொச்சைப்படுத்துவதை தமிழ்நாடு காங்கிரஸும் சரி, SC அணியும் சரி ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். அந்த பதிவை திருமதி குஷ்பூ சுந்தர் அவர்கள் உடனடியாக நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர்களுக்கு 24 மணி நேரம் நாங்கள் கெடு கொடுக்கிறோம். இப்பொழுது மணி 5 மணி ஆகிறது.
நாளைக்கு 5 மணிக்குள்ளேயோ…. குஷ்பூ அவர்கள் தான் போட்ட பதிவிற்கு…….. பட்டியல் இன மக்கள் சமூகத்தை சார்ந்தவர்களை இழிவுபடுத்தியதற்காக பகிரங்கமாக நான் ”மன்னிப்பு கேட்கிறேன்” ”இதுபோன்ற செயல்களை” இனி செய்ய மாட்டேன் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி பகிரங்கமாக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.