
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணன் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.