
கர்நாடகாவை காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. இதில் காவேரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் எதிர்த்து போராடாமல், மத்திய அரசை எதிர்த்து போராடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ,
நாங்கள் கண்டிக்கும் பொது கர்நாடக காங்கிரஸ் மாநில அரசையும் சேர்த்துதான் கண்டிக்கிறோம். இதற்க்கு முதன்மையான அதிகாரம் ஒன்றிய அரசு கிட்ட தான் இருக்கு. அவங்க இதுல அழுத்தம் கொடுக்கணும். கர்நாடக மாநிலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிச்சு இருக்காங்க. அப்போ இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை தான்.
இதுல குற்றவாளிகள் யார் என்றால் ? கர்நாடக அரசும் தான். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று சொல்லி கர்நாடகத்தில் இருக்கிற பாஜக டெய்லி போராட்டம் பண்றாங்க.. அது அவுங்க மாநிலத்தின் அரசியல். ஆனால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஒன்றிய அரசு…
பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் சீட்டு வாங்க வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,
நான் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை மாநாட்டில் சொல்லி இருக்கேன். தோழர்களுக்கு தெரியும். எனக்கு போட்டி போடுவதற்கு விருப்பம் கிடையாது. அதே நேரத்தை பொறுத்தவரை எங்களுடைய கூட்டணி சார்பாக…. எங்களுடைய கூட்டணி தலைமை அண்ணன் தளபதி அவர் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதே நேரத்தில் கூட்டணியில் எத்தனை சீட்டு இதெல்லாம் எங்க இயக்க மூத்த நிர்வாகிகள் முடிவெடுப்பாங்க. அது பற்றி கருத்து நான் சொல்ல முடியாது தெரிவித்தார்.