செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் அழகிரி அவர்கள் 2014 ஏப்ரலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரையில்  சொல்றாங்க. இந்த மாதிரி TR பாலு  எவ்வளவு ஊழல் பண்ணாரு ? எப்படி எல்லாம் ஊழல் பண்ணாரு ? எவ்ளோ கப்பல் வச்சிருக்காரு?  சேது சமுத்திரத் திட்டம் மூலமாக எவ்வளவு சம்பாதிப்பதற்கு கிளம்பி இருக்கின்றார்,  எல்லாம் எனக்கு தெரியும்ன்னு  கலைஞர் கருணாநிதி அவருடைய மகன் அழகிரி அவர்கள்…

நான் சொன்ன அதே குற்றச்சாட்டை 2014 ஏப்ரலில் சொன்னாங்க. அதற்கு இதுவரை அழகிரி அவர்கள் மீது இவர் எந்த வழக்குமே தொடுக்கல,  அழகிரி அவர்கள் மீது எந்த அவதூறு வழக்கும் போடல.  அழகிரி வச்ச அதே குற்றசாட்டை  நாமளும் மக்கள் மன்றத்தில் வச்சிருக்கோம். அதே போல 2008 அப்ப இருக்கக்கூடிய முக்கியமான பத்திரிகை ”ஹிந்துஸ்தான் டைம்ஸ்” உட்பட TR. பாலு அவர்கள் பாராளுமன்றத்தில…   அப்போ இருக்க கூடிய பெட்ரோலிய அமைச்சரை  போன் செய்து இந்த மாதிரி என்னுடைய கம்பெனி, 

அந்த கிங்ஸ் கெமிக்கல்,  அதற்கு கெயில்  கம்பெனில இருந்து நீங்க கேஸ் குடுங்க அப்படினு பதவியை துஷ்பிரயோகம் செஞ்சி கேஸ் கேட்டு இருக்காரு. அதையும் பாராளுமன்றத்துல TR பாலு ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்,  அதையும் அவதூறு வழக்கில் போட்டு இருகாங்க, அது பாராளுமன்றத்துல ஆன் ரெகார்ட்  பேசுனது… அப்போதைய அதிமுக ராஜசபா  எம்.பி மைத்ரேயன் அவர்கள் கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார்.

சகோதர –  சகோதரிகளே… அவருடைய சத்திய பிரமாணத்தில அவர் மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன், மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பாட்டு 1-இல் ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கின்றோம். TR. பாலு அவங்க எங்க இருக்கிறாங்க? TR. பாலு அவருடைய மகன் எங்க இருக்காங்க?

TR. பாலு அவருடைய மருமகள் எங்க இருக்காங்க? மொத்தமாக 10,000 கோடி ரூபாய்க்கு மேல அந்த குடும்பத்தில் சொத்து வந்திருக்கு… எப்படி வந்திருக்கு ? அப்படினு கேள்வி கூட எழுப்பிருக்கோம். ஆனால் அவருடைய சத்திய பிரமாண வாக்குமூலத்தில் இதெல்லாம் மறைத்து,  அரைகுறையாக…  நீதிமன்றத்தையே அவமதித்து இருக்காங்க..  பல பொய்களை  சத்திய பிரமாணதுல கூட சொல்லிருக்காங்க…

வருகின்ற நாட்கள்ல பாரதி ஜனதா கட்சி குறிப்பாக நான் ஏப்ரல் 14ஆம் தேதி DMK பைட்ஸ் சொல்லி இருக்கக்கூடிய ஒரு ஒரு குற்றச்சாட்டுக்கும் கூட கோர்ட்டுள்ள நாங்க பதில் சொல்றோம், கடமைப்பட்டிருக்கிறோம். இன்னைக்கு தமிழகத்துல என்ன சண்டை நடக்குதுனா..?  மூன்றாம் தலைமுறைக்கும், முதல் தலைமுறைக்கும் சண்டை நடக்குது. இங்க இருக்க கூடிய 1000-கணக்கான  மனிதர்கள் எல்லோருமே முதல் தலைமுறையை சார்ந்தவர். சுயமாக, அவர்களாக வந்து…  இந்த நாட்டில் ஒரு வேலையை செய்து, இந்த நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று என்பதற்காக வந்திருக்கிறவங்க முதல் தலைமுறை.

திமுக-வினுடைய மொத்த குடும்பமே மூன்றாம் தலைமுறை.  இன்னைக்கு தமிழகத்துல யாரெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரி இருக்கீங்க, ஊழலை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கின்றீங்க…  தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறீங்க…   எல்லா முதல் தலைமுறை சொந்தங்கள் எங்களோடு இணைய வேண்டும். இது ஊழலுக்கு எதிரான போராட்டம். இது ஒரு நாள்,  இரண்டு நாள்,  நடக்க போவதில்லை. இது முதல் தலைமுறைக்கும் – மூன்றாம் தலைமுறைக்கும் நடக்கக்கூடிய யுத்தம். இந்த யுத்தம் இன்னைக்கு நாளைக்கி முடிய போறது இல்ல, பெரிய யுத்தமாக இருக்கும்… அதற்கு தயாராக தான் இங்கே வந்திருக்கின்றோம் என தெரிவித்தார்.