
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி க்கு சேர்மேனை போடறதுக்கும் வக்கில்லை…. மெம்பர்ஸ் போடறதுக்கும் வக்கில்லை…. மெம்பெர்ஸ் எல்லாம் காலியா இருக்கு… சேர்மன் பதவி காலியா இருக்கு…. அத பில்லப் பண்றதுக்கு துப்பு கிடையாது அரசாங்கத்துக்கு….. கிட்டத்தட்ட 3 லட்சம் வேகன்ஸி இருக்கு ஸ்டேட்ல…. அந்த மூன்று லட்சம் அரசு ஊழியர்களை வருஷத்துக்கு ஒரு லட்சம் பேர் போட்டு….
அஞ்சு வருஷத்துல நாங்க வந்து 5 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் மூலமாகவும்…. நாங்க எம்பிளாய்மென்ட் கொடுப்போம் என சொன்னீங்க… அது ஒன்னும் செய்யல… யானை பசிக்கு சோலைபொறி என்பது போல 25 ஆயிரம் வேக்கன்சி குரூப் 2ல மட்டும் இருக்க. 25 ஆயிரம் வேக்கன்சி குரூப் 2 ல இருக்கு.
2018 ஆம் ஆண்டு எங்க ஆட்சியில் மினிஸ்டரா நான் இருந்தேன். அப்பு கிட்டத்தட்ட 1700 போஸ்டிங்க்கு கால் பண்ணி உடனே போட்டும். ரெண்டு மூணு மாசத்துல குயிக்கா போட்டோம்.. இப்போ குரூப் 2 எழுதி கிட்டத்தட்ட எழுதி பல மாதமாகிறது…. இன்னும் ரிசல்ட் வெளியிடல… குரூப் 2 எக்ஸாம் எழுதின தேர்வாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? 25, 000 வேக்கன்சி இருக்கு…. நீங்க தானே தேர்தல் வாக்குறுதி சொன்னீங்க.. அப்படி இருக்கும்போது நீங்க 400 வேக்கன்சி…. 500 வேகன்ஸி போடுறீங்களே நியாயமான என கேக்குறாங்க ? இது நியாயமா ? நியாயம் இல்லையா ?
தயவு செஞ்சு சொல்லுங்க…. நீங்க தானே சொன்னீங்க மூன்றை லட்சம் பேரு அரசு ஊழியர்கள் பணியில் நியமனம் பண்ணனுவோம்ன்னு… அந்த மூன்றை லட்சம் பேர்விடுங்க… குரூப் 2வில் 27000 போஸ்ட் காலியா இருக்கு இல்லையா ? அந்த 27000க்கு நோட்டிபிகேட் பண்ணுங்க… அதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு….. எவ்வளவு தான் ஊதுவது… செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி ஊதுறத உதிட்டு தான் இருக்கின்றோம்… கண்டிப்பா இது கேட்கும்னு நினைக்கிறேன் உங்களுக்கு…. இது கேட்ட தேர்வர்களின் கோபத்திற்கு….. தயவு செய்து இந்த விடியாத அரசு ஆளாக வேண்டாம். உடனடியாக அந்த 27000க்கு நோட்டிபிகேஷன் விடுங்க, அதுதான் அவர்களின் வேண்டுகோள் என தெரிவித்தார்.