சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா நாத்துக்கும், தம்பி ரவி பிரசாந்துக்கும் இடையே அடிக்கடி சிறு சிறு தகராறுகள் நடந்து வந்துள்ளன.

வழக்கம்போல தம்பி ரவி பிரசாந்த், அண்ணன் கிருபா நாத்திடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த சண்டையில் ஆவேசத்தில் அண்ணன் கிருபாநாத் தம்பியை கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார்.

உடனே ரவி பிரசாந்த் மயங்கி சரிந்துள்ளார். இதனைப் பார்த்ததும் செய்வதறியாது பயத்தில் கிருபாநாத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்,பக்கத்தினர் அண்ணன், தம்பியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாநாத் பரிதாபமாக இறந்தார்.

மேலும் காயப்பட்ட ரவி பிரசாத் உயிருக்கு போராடிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன்,தம்பி சண்டையில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.