
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, எங்களைப் பொருத்தவரையில் ஒரு தனி மனிதனுடைய விமர்சனம் தேவையில்லை. ஒரு கட்சிதான். அந்த கட்சியை கண்டித்து நாங்கள் ஏற்கனவே ஒருமுறை கண்டன தீர்மானத்தை கொண்டு வந்து, கட்சியினுடைய தலைமைக்கு தெரிவித்துவிட்டோம். அதை தொடர்ந்தும் அந்த கட்சியில் எங்களுடைய தலைவர்களை விமர்சனம் செய்தார்கள் என்று சொன்னால் ? நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுச்செயலாளர் கருத்து சொல்வது என்பது எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். இந்த ஜனநாயக இயக்கத்தில் நான் இப்போது இங்கு அமர்ந்து கொண்டிருக்கின்றேன். உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் ? எங்களுடைய பொதுச்செயலாளர் உடைய உணர்வுகளை நான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் பொதுச்செயலாளர் சொல்லுகின்ற கருத்தாய் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எனவே பொதுச் செயலாளர் சொல்ல வேண்டிய காலம் வருகின்றபோது பொதுச்செயலாளரும் சொல்லுவார். யாருக்காகவும் அவர் ஒதுங்கி நிற்கவில்லை. காலம் நேரம் வருகின்ற போது அவரும் அனைத்தையும் எடுத்துச் சொல்வார்.
ஜனநாயக முறைப்படி நடக்கக்கூடிய இயக்கம் இந்த இயக்கம். எனவே இந்த கருத்தில் சொல்லுகின்றோம் என்று சொன்னால் ? பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் ஏற்கனவே கொண்டு வந்த தீர்மானத்தினுடைய இறுதி வடிவம். இதற்கிடையில் ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சியிலும் விமர்சனம் செய்கின்றபோதும்… விவாதம் செய்கின்றபோதும்… தவறான கருத்துக்களை சொல்கின்ற காரணத்தினால் தான் இன்று உங்களை சந்திக்க கூடிய சூழ்நிலையில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.