
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கடனை பெற்று, அதை திருப்பி செலுத்துவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. மகளிர் அந்த கடன் உதவி மூலம் வாழ்வில் அடுத்த நிலைக்குச் செல்லவும் இந்த அரசு எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்கும்… அதனால் தான் மகளிர் தொழில் முனைவோராக வரவேண்டும் என்று நம் அனைவரும் உழைத்து வருகின்றோம்…
இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில் அளவிலான கூட்டமைப்பின் கீழ் அந்த பகுதியைச் சேர்ந்த 35 சுய உதவி குழுக்களை சேர்ந்த 455 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்த கூட்டமைப்பு சிறு வங்கி போல செயல்பட ஏதுவாக, ரூபாய் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் கடன் இணைப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்…
அதேபோல் இந்த நிகழ்ச்சியிலே சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மகளிர் சுய உதவி குழுக்களின் சகோதரிகள் தனித்தனியாக துணி வியாபாரம், மளிகை கடை, மீன் வியாபாரம், மசாலா பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்… உங்களுக்கு இங்கு ரூபாய் 15 லட்சம் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது… இது உங்கள் தொழில் சிறக்க உதவியாக இருக்கும்… உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்…
அதேபோல் ஆவடி மாநகராட்சி திருமலை ராஜனூர் பகுதியைச் சேர்ந்த சாலை ஓரம் வியாபாரம் செய்யும் 12 சகோதரிகளை ஒருங்கிணைத்து….. அக்ஷயா சிறப்பு மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. இந்த சகோதரிகள் தங்களுடைய வியாபாரத்திற்காக வெளியில் அதிக அளவில் வட்டிக்கு கடன் வாங்கி வந்த நிலையில், நம்முடைய மையம் மூலம் முறையை 50000 முதல் 4 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, தொழிலை பெருக்கியுள்ளார்கள். உங்களுக்கு இன்றைக்கு 20 லட்சம் ரூபாய் கடன் இணைப்பாக வழங்கப்படுகிறது. இந்த தொகை உங்களுடைய தொழிலை மேலும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.