
காசா நகரத்தில் 3.83 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. 11 சதவீத மக்கள் அந்த நகரத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளாக இருக்கிறார்கள். குறிப்பாக காசா நகரத்தில் குடிநீர், உணவு, மின்சாரம் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதல் கடந்த 42 மணி நேரத்திற்கு மேலாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக நடத்தி வருவதால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் பரிதவித்து வருகிறார்கள்.
இந்த போரில் 246 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்களும் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்களில் இருந்து தொடர்ச்சியாக இது போன்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. காசா நகரம் உச்சகட்ட பதற்றத்திலும், செயலிழந்தும் உள்ளது. இணைய வசதி, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அரசு இயந்திரம் முழுமையான செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய படைகள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காசாவின் உடைய 51 கிலோமீட்டர் எல்லையை சுற்றி முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அதிக அளவில் மனித உரிமை மீறல்களும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஐநா தங்களுடைய கவலைகளை தெரிவித்ததோடு, குழந்தைகள் மற்றும் பெண்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கான நிவாரணங்களை கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கான முகாம்களை அமைத்து அவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மனிதநேயத்தோடு அனைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் போரில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவில் கண்ணீரும் கம்பளையுமாக கதறும் விடியோக்களை வைரலாகி உலக நாடுகளின் நெஞ்சை உருக்கி உள்ளது. குழந்தைகள் காயம் பட்ட கைகளை பார்த்து கண்ணீர் வடிப்பது போன்ற காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க வைக்கின்றது.
இதனிடையே ஹமாஸை நசுக்கி ஒழிக்க போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். ராணுவத்தினர் தலைகளை ஹமாஸ் கொய்ததாக பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
חמאס זה דאעש –
נרסק ונחסל אותו כפי שהעולם ריסק וחיסל את דאעש.— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) October 11, 2023