
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியாட்சிக்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் பணியை ட்ரம்ப் மேற்கொள்கிறார்.
அந்த வகையில் இந்தியா, ஹோண்டுராஸ், பெரு, கவுதமாலா ஈக்வடார், பனாமா போன்ற நாடுகளை சேர்ந்த மக்களை கைது செய்து ராணுவ விமான மூலம் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அகதிகளை அழைத்து செல்வதால் அதிகளவு செலவாகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதற்காக 30 லட்சம் அமெரிக்க டாலர் செலவானது என்று கூறியுள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் அகதிகளை வெளியேற்ற ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என டிரம்ப் கூறியுள்ளார்.