அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்ப்பார்கள் செயல்படுவதாக சுரேஷ்பாபு என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனியார் ஹோட்டல்கள், கிளப்புகள் போன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுப்பார்கள் செயல்படுவதாகவும், இவற்றை தடுக்க அரசுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கிப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,  கலால்துறை, காவல்துறை,  வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடக்க குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனவே மாவட்ட ஆட்சியர்கள் அந்த குழுக்களை அமைத்து  கண்காணிப்பார்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மீறி செயல்படும் பார்கள்  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,மாவட்ட ஆட்சியர்கள் அமைத்த குழுக்கள் சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும்ம்,  உரிய சோதனை மூலமாக நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தலாக வழங்கி,  சுரேஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்கள்.