தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த அளவிற்கு பின்பற்றப்படுகிறது என்று டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.