
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவின் அறிக்கை பாஜகவின் அறிக்கையை ஒட்டி இருக்கிறது என முதலமைச்சர் கூறியிருந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா என எந்த காலத்திலும் அதிமுக யாரை நம்பியும் இல்லை. அதிமுக யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. அதிமுக மக்களை நம்பி இருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் நாடியது கிடையாது. எங்களை நாடிதான் அனைவரும் வருவார்கள்.
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது Go Back Modi என்ற கருப்பு பலூன் இருந்தது. ஆளும் கட்சியானதும் ஊழல் குற்றச்சாட்டுகளால் Welcome Modi என்று வெள்ளை குடையெல்லாம் வந்துவிட்டது. வெள்ளைக்கொடை வேந்தர் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என விமர்சித்துள்ளார்.