
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, DMK ஆட்சியில் ஒரு திட்டம் வரல. இன்னைக்கு எங்க காலத்துல கொண்டுவரப்பட்ட ரெண்டு மேம்பாலம் உங்களுக்கு தெரியும்….. கோரிப்பாளையம், இப்போ அப்போலோ ஹாஸ்பிடல்…. மாண்புமிகு முதலமைச்சர் பூஜை போடுகிறார்… அங்க நாங்க உருவாக்கி வச்சத… இவர் பூஜை போட்டு, ரெண்டு வருஷம்…
இரண்டரை வருஷம் கழிச்சு பூஜை போட்டா ? இவங்க போட்டது மாதிரி ஆயிருமா ? என்ன இந்த அரசாங்கத்தை பாருங்க….. எங்க காலத்துல நாங்க முயற்சி பண்ணி.. பிரைவேட்காரங்களுக்கு எல்லாருக்கும் இடம் கொடுத்து பணம் கொடுத்து… அதை சமாதானப்படுத்த வச்சோம்.
இன்னும் ஒரு வருஷம் ஆச்சி எங்க ஆட்சி இருந்திருந்தால் மதுரை இந்த மாதிரி வந்திருக்கவே வந்திருக்காது. நான் எப்பவுமே சொன்ன மாதிரி ஜேம்ஸ் நதியை போல மதுரை வைகையை மாற்றி இருப்போம். இன்னைக்கு பாருங்க… ஆகாயத்தாமரை நிறைந்து போய் இருக்கிறது. வைகை அணையில் மழை நீர் 66 அடி உயர்ந்திருச்சு.
இன்னைக்கு அந்தத் தண்ணியை திறந்து விடப் போறாங்க. அது பூராம் வைகை ஆற்று பாலத்துக்கு வரும்போது அங்கு தடுப்பணை கட்டப்பட்டிருக்கு… அங்க பாத்தீங்கன்னா முன்னால ஒரு தரை பாலம் இருக்கு. அங்கு பூரா தேங்கி நிக்குது. இப்ப இந்த தண்ணி பூராம் என்ன ஆகும் ? பிரதான சாலையில் மேலே ஏறும். மேல ஏறி வண்டி, வாகனங்கள் செல்ல முடியாது. நாங்க போட்டு இருக்கிற விரைவு சாலைகளில் வண்டி வாகனங்கள் போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் போக முடியாத சூழ்நிலை என தமிழக அரசை விமர்சனம் செய்தார்.