அமெரிக்காவில் மைக்கேல் பேக்கர்ட் (58) என்ற மீனவர் லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளார். அப்போது திடீரென்று ஏதோ மோதுவது போல் தெரிந்துள்ளது. இதனால் அவர் கண்விழித்துப் பார்த்தபோது சுற்றிலும் இருளாக இருந்துள்ளது. அதன் பின்பு தான் ஒரு திமிங்கலத்தின் வாயினுள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அதன் வாயிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக, அதன் வாயில் ஓங்கி மிதித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத திமிங்கலம், தலையை அசைக்க தொடங்கியது. அதன் பின் சில வினாடிகளுக்குள் வாயில் இருந்த மைக்கேலை திமிங்கலம் வெளியே துப்பியது.

இதனை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து, திமிங்கலம் நிலப்பரப்பிற்கு வந்தது என்பதையும், மைக்கேல் தண்ணீரில் நீந்தி கொண்டிருப்பதை கண்டு அவரை மீட்டு படகில் ஏற்றினர். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். அவருடைய சதை பகுதி மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், 3 வாரத்திற்கு பிறகு மீண்டும் லாப்ஸ்டரை பிடிக்க இறங்கினார். பொதுவாகவே திமிங்கலங்கள் உணவை உண்ணும் போது, வாயை பெரிதளவில் திறக்கும், அப்போது அதிக அளவிலான உயிர்களை திமிங்கலங்கள் வாய்க்குள் எடுத்துக்கொள்ளும். அப்போது அவை கண்ணை மூடி விடும் என்பதால் திமிங்கலத்தால் பார்க்க முடியாது, இப்படித்தான் மைக்கேளும் திமிங்கலத்தின் வாய்க்குள் சென்றார்.