
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிர்வாகிகள் அவங்க கருத்தை பதிவு பண்ணி இருக்காங்க. அவுங்க அவுங்க கருத்தை பதிவு பண்ணி இருக்காங்க… உயர்மட்ட குழுவுல அந்த கருத்தை பரிசீலிக்கப்பட்டு, அவர்களுடைய கருத்தை தனிப்பட்ட முறையில் என்னைக்குமே நான் அவங்களுக்கு போன் பண்ணி கேட்பேன். நீங்க அங்கு ஒன்னு பேசினீங்க… இதான் உறுதியா முடிவெடுக்கணும்னு நினைக்கிறீங்களான்னு கேட்பேன்…
அந்த முடிவுக்கு ஏற்ப உயர்மட்ட குழு அதை பதிவு செய்து, நாங்க என்ன முடிவெடுக்கலாம்னு சொல்லி, எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அந்த முடிவை எடுப்போம். நாடாளுமன்ற தேர்தல் பத்தி தான் பேசிட்டு இருக்கோம். கூட்டணி இருக்கணுமா ? இல்லையா ? ஆதரவு தெரிவிக்கணுமா ? இல்லையா ? இல்லாட்டி இலக்கு 2026ன்னு பயணிப்போமா? என்ற ஒரு முடிவை 15 நாட்களுக்குள் தெரிவிப்போம்.
கூட்டணிக்கு பேசிட்டு இருக்காங்க…. என்னுடைய கருத்துக்களை பரிமாறி இருக்கின்றேன்… அது கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும். யார்கிட்ட பேசுறேன்னு அவங்களே சொல்லுவாங்க… 2024 மக்களவை தேர்தலில் வாய்ப்பு இருப்பதை எப்படி எடுக்க வேண்டும் என்ற முடிவை தான் ஆலோசித்துக் கிட்டு இருக்கோம். கேக்குறாங்க, பேசுறாங்க அப்படின்னு சொன்னால், என்ன மாதிரி முடிவு எடுக்கப் போறோம் ? ஏன்னா 2026க்கு அந்த முடிவின் பிரதிபலிப்பு 2026 ல் தெரியும்.
அதனால இப்ப எடுக்கிற முடிவு உறுதியா இருக்கணும். பலமுறை பல முடிவுகள்…. 16ஆண்டுகள் இந்த இயக்கத்திலே பயணித்துக் கொண்டிருக்கும் போது சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லை, சில முடிவுகள் சாதகமாக இருந்திருக்கிறது. எடுக்கின்ற முடிவு 2026யை நோக்கி பயணிக்கின்ற போது சிறந்த முடிவாக அமையனும். இனி நாம் எந்த இடத்திலும் ஒரு சறுக்குதல் இருக்கக் கூடாது என்ற முடிவு அது நான் 2026 தேர்தல் என்று சொல்லி கிட்டத்தட்ட மூணு, நாலு மாசம் முன்னாடியே சொல்லிட்டேன்.
ஆறு மாசம் இருக்குமா? 6 மாதம் முன்னாடியே நான் 2026யை இலக்காக வைத்து பயணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். இன்றைக்கு விஜய் அவர்கள் கட்சியை தொடங்கியிருக்கிறார்கள் என்று செய்தியை கேள்விப்பட்டேன். இங்கு உட்காரும் போது தான் சொன்னார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மட்டும் நான் சொல்ல முடியும் என தெரிவித்தார்.