
கர்நாடக மாநிலம் பாஜக கட்சி எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல். இவர் தற்போது ராகுல் காந்தியின் ஜாதி மற்றும் மதம் குறித்து கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அமெரிக்காவிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி நாட்டிற்கு எதிரான பல கருத்துக்களை அங்கு பேசி வருகிறார். அவர் இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார். ஆனால் அவருக்கு அவர் பிறந்த ஜாதியே என்னவென தெரியாது. அவர் தன்னை ஒரு பிராமணர் என்று கூறினால் அவர் எந்த வகை பிராமணர் பூணூல் அணிகிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில் கிறிஸ்தவரா முஸ்லிமா என்பதை விசாரிக்க வேண்டும் என்று கூறினார். இவர் கடந்த வருடம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேரு கிடையாது சுபாஷ் சந்திர போஸ் தான் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எம்பி அனுராக் தாகூர் தன் ஜாதி என்னவென்று தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல் காந்தியை விமர்சித்து இருந்தார். மேலும் அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.