உடுப்பியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பணியில் இருந்த 24 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில்; அந்தப் பெண்ணும் அல்தாப் என்ற நபரும் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர், இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் வெள்ளிக்கிழமை, அல்தாப் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் இடத்திற்கு வந்து பேசிய நிலையில் , திடீரென அந்த பெண்ணை அங்கிருந்து காரில் துணிச்சலுடன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. .

சிறிது நேரம் கழித்து, அல்தாப்பின் மற்றொரு கூட்டாளியான ரிச்சர்ட் கார்டோசா அவனுடன் சேர்ந்துள்ளார். அவர்கள் அந்த பெண்ணை யாரும் இல்லாத ஒதுக்குபுறமான இடத்திற்கு கடத்தி சென்று அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து பெண்ணை குடிக்க வற்புறுத்தி உள்ளார். மறுத்த நிலையில் அல்தாப் குளிர்பானத்தில் ஊற்றி, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததுடன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணை மீண்டும் அவரது வீட்டில் இறக்கிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .

அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, “அல்தாப் மற்றும் கார்டோசா இருவரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீதும் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.