
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் நடிப்பில் கடைசியாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மே 1-ல் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூட்டிங் இடைவெளியில் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் செய்த விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர் விஜய்க்கும் அவருடைய பெற்றோருக்கும் பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் லியோ படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் அவருடைய தாயார் சோபாவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதேபோன்று நடிகர் அஜித் தற்போது நேபாளத்திற்கு பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமையல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தற்போது நடிகர் அஜித்தின் புதிய வீடியோக்கள் மட்டும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது தல ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
Recent Ajith Kumar sir cooking Nepal hotel🤩🔥#RIDEformutualrespect #AjithKumar #Ak62 #Thala
More exclusive video only on Ajithkumar_samrajyam follow now ❤️ pic.twitter.com/Sk3gyodxip— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 24, 2023